ஈரானுக்காக உளவு பார்த்ததாக..பிரித்தானியாவின் லண்டனில் 4 பேர் கைது
பிரித்தானியாவின் லண்டனில் ஈரானுக்காக உளவு பார்த்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாத எதிர்ப்பு காவல் துறை
லண்டனின் பார்னெட் மற்றும் வாட்ஃபோர்டில் உள்ள முகவரியில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, அதிகாலை 1 மணியளவில் நான்கு பேரை பொலிஸார் கைது செய்தனர்.

ஈரானுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்திற்குரிய தேசிய பாதுகாப்பு சட்டக் குற்றங்கள் தொடர்பாக, பயங்கரவாத எதிர்ப்பு காவல் துறை விசாரணையின் ஒரு பகுதியாக அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பார்னெட்டில் உள்ள முகவரிகளில் 40 வயதுடைய ஒருவரும், 55 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்த பெருநகர காவல்துறை, தொடர்ந்து தேடுதல்கள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

லண்டன் பகுதியில் உள்ள யூத சமூகத்துடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் தனிநபர்களை கண்காணிப்பது தொடர்பான விசாரணை இது என்றும் கூறப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |