நான்கு கார் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விபத்து...தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸில் பரபரப்பு
- அமெரிக்காவில் நான்கு கார்கள் மோதிக் கொண்டு விபத்து.
- இருவர் உயிரிழந்து இருப்பதுடன், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
அமெரிக்காவின் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸில் நான்கு கார்கள் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் இருவர் உயிரிழந்து இருப்பதாகவும், ஒருவர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை மான்செஸ்டர் அவென்யூ மற்றும் ஃப்ளோரன்ஸில் உள்ள சவுத் பிராட்வேயின் மூலையில் 110 ஃப்ரீவேயில் நான்கு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் இருவர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மூன்றாவது நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையின் கூற்றுப்படி, இந்த கார் விபத்து போக்குவரத்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கியதாகவும், மான்செஸ்டர் அவேயில் மேற்கு நோக்கிய தெருவில் இறங்கிய காரை பொலிஸார் பின்னுக்கு இழுக்க முற்பட்டனர்.
ஆனால் அந்த கார் பிராட்வேயில் தெற்கு நோக்கி பயணித்த மற்றோரு காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை மேலும் காயமடைந்த நபர் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.
(Onscene.tv
கூடுதல் செய்திகளுக்கு: கனடாவில் அதிகம் பேசப்படும் 4-வது மொழியான இந்திய மொழி!
மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர், இவர்களில் ஒருவர் 20 வயதிற்குட்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.