ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா
ஐரோப்பாவை மீண்டும் வல்லரசாக மாற்றத் தயாராகும் ட்ரம்ப் திட்டத்தின் ஒருபகுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகள் வெளியேற்றப்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புவதாக தகவல் கசிந்துள்ளது.
நிழலில் செயல்பட வேண்டும்
இந்த விவகாரம் தொடர்பில் கசிந்துள்ள ரகசிய ஆவணம் ஒன்றில், மிக மோசமான கட்டத்தில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி மற்றும் போலந்து ஆகியவை வெளியேறி அமெரிக்காவின் நிழலில் செயல்பட வேண்டும் என்பதை ஊக்குவிக்க NSS அமைப்பு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட பொது வரைவின் ஒரு பகுதி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதில், ஐரோப்பியத் தலைவர்களின் கொள்கை முடிவு மற்றும் தணிக்கைக் கொள்கைகள் காரணமாக கண்டத்தில் நாகரிக அழிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் NSS அமைப்பைன் அந்த முழு ஆவணமும் தற்போது கசிந்துள்ளது. அதில், அமெரிக்க நட்பு நாடுகளை ஐரோப்பாவில் இருந்து வெளியேற அல்லது வெளியேற்ற அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
குறிப்பாக அந்த நான்கு நாடுகளையும் குறிவைத்து தீவிரமாக களமிறங்க வேண்டும் என்றும், இறையாண்மை மற்றும் பாரம்பரிய ஐரோப்பிய வாழ்க்கை முறைகளைப் பாதுகாத்தல் அல்லது மீட்பு ஆகியவற்றை நாடும் அரசாங்கங்கள் மற்றும் இயக்கங்களை குறிவைக்கவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கள் நாடுகளை
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இந்த விவகாரம் தொடர்பில் சலசலப்பு இருந்தபோதிலும், வெள்ளை மாளிகை அதன் கொள்கை முடிவில் இருந்து விலக மறுத்துவிட்டது.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைகளுக்கு எதிராகவும் இந்த வாரம் ட்ரம்ப் தாக்குதலைத் தொடுத்துள்ளார். பெருமளவில் புலம்பெயர் மக்களை அனுமதிப்பதன் மூலம் ஐரோப்பாவின் தலைவர்கள் தங்கள் நாடுகளை அழித்து வருவதாக ட்ரம்ப் எச்சரித்தார்.

மட்டுமின்றி, ஐரோப்பா தவறான பாதையில் பயணித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மிக சமீபத்தில் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் தலைவர்களைத் தொடர்புகொண்ட ட்ரம்ப் மிகக் கடுமையான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |