வீட்டிற்குள் நுழைந்த போது அடுத்தடுத்து கிடந்த சடலங்கள்! மொத்த குடும்பமும் தற்கொலை
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பங்கு சந்தையில் இழப்பு
மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில் தான் இந்த துயரம் அரங்கேறியுள்ளது. கேசவ்நகரில் வசித்து வருபவர் தீபக் (59). இவர் மனைவி இந்து தீபக் (45). தம்பதிக்கு ரிஷிகேஷ் (24) என்ற மகனும் சமிக்ஷா (17) என்ற மகளும் இருந்தனர்.
தீபக் பங்கு சந்தையின் மிக அதிகமான பணத்தை முதலீடு செய்திருந்த நிலையில் அவருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த குடும்பமும் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.
punekarnews
விஷம் குடித்தனர்
இந்நிலையில் பண நெருக்கடியால் தங்கள் வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவெடுத்து நால்வரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து பொலிசார் தீபக் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது வீட்டுக்குள் சென்ற போது அடுத்தடுத்து 4 பேரும் சடலமாக கிடந்தனர். பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.