நால்வரை பலி வாங்கிய குட்டி விமான விபத்து.. அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுமி
அமெரிக்காவின் பீவர் தீவில் குட்டி விமானம் ஒன்று விபத்தில் சிக்கி, அதில் பயணித்த நால்வர் பலியான நிலையில், சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தானது மிச்சிகன் ஏரியில் நடந்துள்ளது. விமான விபத்திற்கு பின்னர் 11 வயதான குறித்த சிறுமி மீட்கப்பட தகவலை அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
சிறுமியும் ஆண் ஒருவரையும் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுமி மட்டும் உயிர் தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் இரண்டு நாய்களும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல்படை ஹெலிகொப்டர் ஒன்று, குட்டி விமானம் விபத்துக்குள்ளான தகவல் தெரியவந்து, சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது. குறித்த துரித நடவடிக்கையாலையே, 11 வயது சிறுமி காயங்களுடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
மேலும், விபத்தில் சிக்கிய விமானத்தின் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிச்சிகனில் உள்ள Welke விமான நிலையம் செல்லும் வழியிலேயே அந்த குட்டி விமானம் விபத்தில் சிக்கியதாக தெரிய வந்துள்ளது.
விபத்து தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவை அறிவித்துள்ளன.
சிறுமி மற்றும் விபத்தில் கொல்லப்பட்ட விமானி உட்பட நால்வரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.