மூன்றாம் உலகப்போர் குறித்த பாபா வங்காவின் கணிப்பு: கவனம் ஈர்த்துள்ள நான்கு அறிகுறிகள்
மத்திய கிழக்கில் உருவான பதற்றத்தைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப்போர் குறித்த பாபா வங்காவின் கணிப்புகள் மீண்டும் கவனம் ஈர்க்கத் துவங்கியுள்ளன.
சிரியா வீழ்ந்தால் மூன்றாம் உலகப்போர்...
பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பார்வையிழந்த தீர்க்கதரிசியான பாபா வங்கா, தான் 1996ஆம் ஆண்டு மரணமடையும் முன்பே, சிரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என கணித்துச் சென்றுள்ளார்.
அவர் கணித்ததுபோலவே, திடீரென சிரியா கிளர்ச்சியாளர்கள் வசம் வீழ்ந்துள்ளதால், பாபா மீண்டும் கவனம் ஈர்க்கத் துவங்கியுள்ளார்.
நான்கு அறிகுறிகள்
இந்நிலையில், பாபா கணித்த நான்கு அறிகுறிகள் பலித்துள்ளதால், பாபாவின் கணிப்புகளை பின்பற்றுவோர் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் காலம் தொலைவில் இல்லை என நம்பத் துவங்கியுள்ளார்கள்.
சிரியாவின் வீழ்ச்சி
பாபா கணித்துள்ள விடயங்களில், மூன்றாம் உலகப்போருடன் தொடர்புடையதாக கருதப்படும் முக்கிய விடயம் சிரியாவின் வீழ்ச்சி ஆகும்.
’சிரியா வீழ்ந்ததும் உடனடியாக மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே மிகப்பெரிய போர் ஒன்று துவங்கும் என எதிர்பார்க்கலாம்.
இளவேனிற்காலத்தில், கிழக்கில் ஒரு போர் துவங்கும். அதைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப்போர் துவங்கும், கிழக்கில் நடக்கும் போர், மேற்கை அழிக்கும்’ என்று கூறியுள்ளார் பாபா.
அவர் கணித்ததுபோலவே, யாரும் எதிர்பாராத நேரத்தில் சிரியா வீழ்ந்துள்ளது.
உலகத்தின் பிரபுவான புடின்
ரஷ்ய ஜனாதிபதி புடின் குறித்து கணித்துள்ள பாபா, புடின் உலகத்தின் பிரபு ஆவார் என்றும், ஐரோப்பா தரிசு நிலமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்தும் பனிபோல உருகிப்போகும், ஒருவர் மட்டும் இருப்பார், விளாடிமிர் என்னும் பெருமை, ரஷ்யாவின் பெருமை’ என்று பாபா கூறியுள்ள விடயம், உக்ரைன் போரில் ரஷ்யாவின் வெற்றியைக் குறித்தது என கருதப்படுகிறது.
ஏற்கனவே ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பதால் உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவு விலக்கிக்கொள்ளப்படலாம் என்ற அச்சம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
அழிவின் ஆரம்பம்
2024, அழிவின் ஆரம்பம் என கணித்துள்ளார் பாபா. மத்தியக் கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் உருவாகியுள்ள பதற்றம் குறித்துதான் பாபா இப்படி கூறியிருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
மாபெரும் யுத்தம்
பாபா 2025இல் ஒரு மிகப்பெரிய போர் ஐரோப்பாவில் துவங்கும் என பாபா கணித்துள்ளார். அது ஐரோப்பாவையும், ஐரோப்பாவின் மொத்த மக்கள்தொகையையும் அழித்துவிடும் என்று கூறியுள்ளார் பாபா.
AFP via Getty Images
ஆக, இந்த கணிப்புகள் எல்லாமே மூன்றாம் உலகப்போருடன் தொடர்புடையவை என அவரை பின்பற்றுபவர்கள் கருதுகிறார்கள்.
என்றாலும், ஒரே ஆறுதல் என்னவென்றால், 5079ஆம் ஆண்டில்தான் உலகம் முழுமையாக அழியும் என பாபா கணித்துள்ளதால் மனித இனம் இன்னும் நீண்ட காலம் வாழும் என்பதால் மகிழ்ச்சிதான்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |