லண்டனில் துயர சம்பவம்: உயரமான கட்டிடத்திலிருந்து விழுந்து குழந்தை மரணம்
Four year old girl fell down death in london: பிரித்தானியாவில் நான்கு வயது குழந்தை உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தது.
பிரித்தானியாவின் லண்டனில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
4 வயது பெண் குழந்தை
பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள பார்கிங்கின் செயின்ட் பால்ஸ் சாலையிலுள்ள உயரமான கட்டிடத்தில் இருந்து குழந்தை ஒன்று கீழே விழுந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த அவசரகால மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனடியாக அந்த 4 வயது பெண் குழந்தை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டது.
சிகிச்சை பலனின்றி
சம்பவ இடத்திலேயே அந்த குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து லண்டன் பெருநகர காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
குழந்தையின் மரணத்தில் எந்தவிதமான சந்தேகத்திற்கிடமான அம்சங்களும் இருப்பதாகத் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
