தங்கச் சுரங்கம் இல்லாத நாடு... தங்கம் கையிருப்பில் உலகிலேயே நான்காவது இடம்
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களை எட்டும் நிலையில், பல நாடுகளின் ஃபெடரல் வங்கிகள் தங்கள் தங்க இருப்புக்களை பெருமளவில் அதிகரித்து வருகின்றன.
உலகின் நான்காவது
ஒரு தங்கச் சுரங்கம் கூட இல்லாத ஒரு நாடு தங்கள் அரசு வங்கியில் 2,437 டன் தங்கத்தைக் குவித்து வைத்திருக்கிறது. அந்த நாடு பிரான்ஸ்.

இந்த ஐரோப்பிய நாடு, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக, உலகின் நான்காவது பெரிய தங்க இருப்புகளைக் கொண்டுள்ளது.
பிரான்சில் தங்கச் சுரங்கங்கள் எதுவும் இல்லை என்பதால், அந்த நாடு சொந்தமாக தங்கத்தை உற்பத்தி செய்வதில்லை. ஆனால், பிரான்ஸ் எப்படி இவ்வளவு தங்கத்தை சொந்தமாக்கியது?
காலனித்துவ காலத்தில், அல்ஜீரியா, துனிசியா, மொராக்கோ, செனகல், மாலி, புர்கினா பாசோ, பெனின், கினியா, ஐவரி கோஸ்ட் மற்றும் நைஜர் உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளை பிரான்ஸ் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
பிரெஞ்சு காலனித்துவ நிர்வாகம் இந்த நாடுகளிலிருந்து கணிசமான அளவு தங்கத்தையும் பல்வேறு வளங்களையும் தங்களுக்கு சொந்தமாக்கியது. சுதந்திரம் அடைந்த பிறகும், இந்த நாடுகளில் பல பிரான்சுடன் பொருளாதார உறவுகளைத் தொடர்ந்து பராமரித்தன.

சீனா முதலிடத்தில்
மட்டுமின்றி, இந்த முன்னாள் பிரெஞ்சு காலனிகளின் அரசு வங்கிகள் தங்கள் தங்க இருப்புகளில் ஒரு பகுதியை பிரான்சில் வைத்திருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் காரணமாகவே இந்த தொடர்ச்சியான உறவு பெரும்பாலும் ஏற்படுகிறது.

இதனாலையே, பிரான்ஸ் 2,437 டன் தங்கத்தைக் குவித்து வைத்திருக்கிறது. தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. 2024ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், வருடத்திற்கு 380 டன் அளவிற்கு தங்கத்தை சீனா உற்பத்தி செய்கிறது.
இரண்டாமிடத்தில் 330 டன் என ரஷ்யா உள்ளது. மூன்றாமிடத்தில் 284 டன்கள் என அவுஸ்திரேலியா உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |