அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டோம்: பிரான்ஸ் அமைச்சர்
பிரான்சும் அதன் கூட்டாளர்களும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டோம் என பிரான்ஸ் வர்த்தக அமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டோம்
பிரான்சும், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அதன் கூட்டாளர்களும், அமெரிக்காவின் வரி விதிப்பு அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டோம் என்று கூறியுள்ள பிரான்ஸ் வர்த்தக அமைச்சரான Laurent Saint Martin, பிரான்ஸ் தனது தொழில்துறையை பாதுகாக்கும் என்றும் கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப், தான் துவக்க முடிவு செய்த வர்த்தகப்போரை அதிகரிப்பதற்கான முயற்சிகளைத் துவக்குகிறார் என்று கூறியுள்ள Martin, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து பதில் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதில் உறுதியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |