ரயில் பயணத்தைத் தவிர்க்கவும்... பிரான்ஸ் ரயில்வே நிறுவனத் தலைவரின் ஆலோசனை
பிரான்ஸ் நாட்டை கடும் வெயில் வாட்டி வதைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தொடர்பில் பிரான்ஸ் ரயில்வே நிறுவனத் தலைவர் ஆலோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
ரயில் பயணத்தைத் தவிர்க்கவும்...
ஆம், வெயிலால் எளிதில் பாதிக்கப்படும் அபாயம் உடையவர்கள் தாங்கள் திட்டமிட்டுள்ள பயணங்களை ஒத்திவைக்குமாறு அரசு ரயில்வே நிறுவன தலைவரான ஜீன் (Jean Castex) கேட்டுக்கொண்டுள்ளார்.

அல்லது, குறைந்தபட்சம் ரயிலில் பயணிப்பதையாவது தவிர்க்குமாறு அவர் அத்தகைய மக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

பிரான்சின் முன்னாள் பிரதமருமான ஜீன், அதிக வெயில் காரணமாக மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளதுடன், வெயில், ரயில் பாதைகளையும், ரயில் இயங்குவதற்கு மின்சாரம் வழங்கும் மின்கம்பிகளையும் சேதப்படுத்தக்கூடும் என்பதால், ரயில் சேவை மீது கடும் பாதிப்பை ஏற்படுத்திவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரான்ஸ் வானிலை ஆராய்ச்சி மையம், இன்று மதியம் முதல், பிரான்சின் 49 பகுதிகளுக்கு சிவப்பு வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், அடுத்த வாரமும் இதே நிலை நீடிக்கலாம் என்றும், சில பகுதிகளில் நிலைமை மேலும் மோசமாகவும் வாய்ப்புள்ளது என்றும் பிரான்ஸ் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |