உடனே இந்த நட்டை விட்டு வெளியேறுங்கள்! குடிமக்களுக்கு பிரான்ஸ் வலியுறுத்தல்
பயங்கர அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானை விட்டு வெளியேறும் படி தங்கள் குடிமக்களுக்கு பிரான்ஸ் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பாரிஸில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பின் போது நபிகள் நாயகத்தை கேலி செய்யும் கார்ட்டூனை மாணவர்களுக்கு காட்டிய ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்த கருத்துக்கு பல முஸ்லிம் நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியது, பல அமைப்புகள் போராடத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் போராடத்தில் ஈடுபட்ட மறைந்த Khadim Hussain Rizvi தலைமையிலான Tehrik-i-Labaik Pakistan (TLP) அமைப்பினர், பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
பிரான்ஸ் தூதரை வெளியேற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டங்கள் அமைதியாக கைவிடப்பட்டது.
பிப்ரவரி மாதத்திற்குள் பிரான்ஸ் தூதரை வெளியேற்றுவதாக உறுயளித்த பாகிஸ்தான் அரசு, பின்னர் தனது வாக்குறுதியை நிறைவேற்ற ஏப்ரல் 20 வரை கால அவகாசம் கேட்டது.
இந்நிலையில், ஏப்ரல் 20-க்குள் பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என TLP-யின் தற்போதைய தலைவர் Saad Rizvi அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, சட்டம் ஒழுங்கை காக்க முன்னெச்சரிக்கையாக TLP தலைவர் Saad Rizvi-ஐ பாகிஸ்தான் பொலிசார் திங்கட்கிழமை கைது செய்தனர்.
The ruling @ImranKhanPTI govt in #Pakistan has failed to control the riots as Rizvi-led protestors wreaked havoc in several cities, leading to death and injuries to policemen.
— Wᵒˡᵛᵉʳᶤᶰᵉ Uᵖᵈᵃᵗᵉˢ? (@W0lverineupdate) April 14, 2021
Clearly, #Pakistan is ruled by #ISI and extremists while the govt is just a spectator.#Pakistan pic.twitter.com/dLbvXjaDU4
Saad Rizvi-ஐ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை விடுவிக்க கோரி TLP ஆதரவாளர்கள் பாகிஸ்தானின் பல முக்கிய நகரங்களில் சாலை, ரயில் போக்குவரத்து தடங்களை வழிமறித்து தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வன்முறையால் ஏற்பட்டுள்ள பயங்கர அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானை விட்டு வெளியேறும் படி தங்கள் குடிமக்களுக்கு பிரான்ஸ் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட Saad Rizvi பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த ஆண்டு Khadim Hussain Rizvi மறைந்ததை அடுத்து அவரது மகனான Saad Rizvi, TLP தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.