உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக ராணுவ மையங்கள்... பிரான்சுடன் கைகோர்க்கும் பிரித்தானியா
பிரித்தானியாவும் பிரான்சும், உக்ரைனில் ராணுவ மையங்களை அமைக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
உக்ரைனில் ராணுவ மையங்கள்...
எதிர்காலத்தில் ரஷ்யா மீண்டும் போருக்கு வருமானால் அதை எதிர்கொள்வதற்காகவும், உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் உதவி செய்வதற்காகவும், பிரித்தானியாவும் பிரான்சும் உக்ரைனில் ராணுவ மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளன.

அதன்படி, பிரித்தானியா தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்பும். பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் படைவீரர்கள் உக்ரைனில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுவார்கள்.
விடயம் என்னவென்றால், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானால் மட்டுமே இந்த ராணுவ மைய திட்டம் எல்லாம் அமுல்படுத்தப்படும்.
ஆனால், முன்வைக்கப்பட்டுள்ள 20 அம்ச அமைதி ஒப்பந்தத்துக்கு புடின் இதுவரை ஒப்புதலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |