பிரான்ஸ் காட்டுத்தீ சம்பவம்: 308 பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்
பிரான்ஸில் காட்டுத்தீ பரவலுக்குக் காரணமாக இருந்த 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸில் காட்டுத்தீ
பிரான்ஸில் இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
அரசாங்கத்தின் புள்ளிவிவரத் தகவலின் படி, காட்டுத் தீயில் இதுவரை 1,15,000 ஹெக்டேர் நிலங்கள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன.

300க்கும் மேற்பட்டோர் கைது
இந்நிலையில் பிரான்ஸ் காட்டுத்தீ சம்பவத்திற்கு காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 308 பேர் இதுவரை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 120 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கைது நடவடிக்கையில் வேண்டும் என்றே தீ வைத்தவர்களும், கவனக்குறைவாக தீ விபத்தை ஏற்படுத்தியவர்களும் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமான சட்ட நடவடிக்கை
வேகமாக பரவி வரும் காட்டுத்தீ அபாயத்தை கட்டுப்படுத்தும் விதமாக, தீ வைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிப்பதற்காக ரோந்து பணிகளில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதுவரை 33 நபர்கள் காட்டுத்தீ தொடர்பாக வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர் அல்லது நீதிமன்ற காவலில் உள்ளனர்.
காட்டுத்தீ சம்பவத்தில் பொதுமக்களின் கவனக்குறைவு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |