சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் திட்டம்
சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுவருகிறது.
சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை
இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதல், 15 வயதுக்குக் குறைவான சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுவருகிறது.
மேலும், உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் மொபைல் பயன்படுத்தவும் தடை விதிக்க திட்டமிடப்பட்டுவருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இணையம் சிறு பிள்ளைகள் மீது ஏற்படும் தாக்கம் குறித்து மக்களுக்கு கோபம் அதிகரித்துவருவதே அரசின் இந்த தடை திட்டங்களுக்குக் காரணம் ஆகும்.
சிறார்களிடையே வன்முறை ஏற்படுவதற்கு சமூக ஊடகங்களும் காரணம் என கூறிவரும் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், அவுஸ்திரேலியாவைப் பின்பற்றி பிரான்சிலும் சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.