லெபனானுக்கு நிதியுதவி இருமடங்காக அதிகரிப்பு: பிரான்ஸின் அதிரடி அறிவிப்பு
லெபனானுக்கான மனிதாபிமான உதவியை இருமடங்காக உயர்த்துவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
லெபனானுக்கான உதவி தொகை அதிகரிப்பு
லெபனானில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்கான தொகையை பிரான்ஸ் 17 மில்லியன் யூரோக்களாக உயர்த்தியுள்ளது.
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுன்-நோயல் பரோட்(Jean Noel Barrot) பெய்ரூட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு இடம்பெயர்ந்து இருந்த போரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவியை பிரான்ஸ் இருமடங்காக அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் X தளத்தில் வெளியிட்ட பதிவில், தேர்ந்தெடுக்காத போரில் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் மக்களுடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், லெபனான் மக்களுக்கான மனிதாபிமான உதவியை 17 மில்லியனாக உயர்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் விடுமுறை காலத்தை குறிப்பிட்டு லெபனானில் தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான சர்வதேச முயற்சிகளில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
லெபனானில் மார்ச் 2ம் திகதி முதல் நடைபெறும் இஸ்ரேலின் தாக்குதலில் 1001 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2584 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |