பிரான்சில் பொலிசார் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய நபரின் வீட்டில் பொலிசார் கண்ட புகைப்படம்! அதிர்ச்சி தரும் தகவல்
பிரான்சில் பொலிசார் மீது நடந்த கத்தி குத்து தாக்குதலில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல்தாரி நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அதன் பின் Gonesse (Val-d'Oise) நகரில் உள்ள அவனுடைய வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அதில் தாக்குதல் நடத்தவேண்டிய மற்றும் கொல்லப்படவேண்டிய அதிகாரிகளின் பெயர் பட்டியல் Mickaël Harpon-ன் புகைப்படம் அவருடைய கம்ப்யூட்டரில் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், வீட்டில் இருந்து USB ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் பல பயங்கரவாதம் தொடர்பான வீடியோக்கள் இருந்துள்ளன.
இதைத் தொடர்ந்து அந்த நபரின் மனைவியிடம் அதிகாரிகள் சுமார் 70 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின் அவரை விடுவித்துள்ளனர். விசாரணையின் போது அவரது மனைவி, சமீப நாட்களாக தமது கணவனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.
ஆனால் அது பணிச்சுமை காரணமாக இருக்கலாம் என தாம் எண்ணியிருந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.