பிரான்சில் பொலிசாரின் வாகன கதவை திறந்து வெறித்தனமாக கத்தியால் குத்திய நபர்! காலையில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி
பிரான்சில் பொலிசார் மீது நடந்த கத்தி குத்து தாக்குதலில், தாக்குதல்தாரி அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
பிரான்சின் Cannes-ல் காரின் உள்ளே இருந்த பொலிஸ் அதிகாரிகளை அடையாளம் தெரியாத மர்ம நபர் தாக்கியதில், மூன்று பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் படுகாயமடைந்தார்.
இது குறித்து உள்துறை அமைச்சர் Gerald Darmanin தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Cannes-ல் மூன்று பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில், தாக்குதல்தாரி பொலிஸ் அதிகாரியால் சுடப்பட்டான்.
காயமடைந்த அந்த நபர் மத முழக்கங்களை (நபியைப் பற்றி) கோஷமிட்டு, காவல்நிலையத்திற்கு வெளியே இருந்த மக்களை உள்ளூர் நேரப்படி காலை 6 மணி அளவில் மிரட்டியபடி பொலிசாரை கத்தியால் தாக்கத் துவங்கியுள்ளான்.
இதில் குண்டு துளைக்காத ஆடைகள் பொருந்திருந்த் பொலிசாருக்கு காயம் ஏற்படவில்லை, இதில் மற்றொரு பொலிசார் தாக்கப்பட்ட போது, காரின் உள்ளே இருந்த மூன்றாவது பொலிசார் துப்பாக்கியால் அந்த நபரை சுட்டுள்ளான்.
இந்த சம்பவம் தொடர்பான பயங்கரவாத விசாரணை இன்று துவங்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் 37 வயது மதிக்கத்தக்கவர் என்பதும், அவர் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும், அந்த நபர் தொடர்பாக காவல்நிலையங்களில் எந்த ஒரு புகார் பதிவும் இல்லை, அல்ஜீரியாவில் இருந்து அவர் எப்போது பிரான்சுக்கு வந்தார் என்பது இதுவரை தெரியவில்லை.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரி கூறுகையில், தாக்குதல்தாரி வெளியில் இருந்த மக்களை மிரட்டியபடியே காவல்நிலையத்திற்கு முன்பு இருந்த பொலிசாரின் வாகனத்தின் கதவை திறந்து தாக்குதல் நடத்தியுள்ளான்.
இதில் குண்டு துளைக்காக உடைகளை அணிந்திருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம் ஏற்படவில்லை.
காரின் பின் இருக்கையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அந்த நபர் பலத்த காயமடைந்தார்.
தாக்குதல் நடத்திய நபர் நபிகள் நாயகத்தைக் குறிப்பிட்டு மதக் கோஷங்களை எழுப்பிய படிய தாக்குதல் நடத்தினார். தாக்குதல் தாரி கேன்ஸில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.