புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த ராணுவம்: பிரித்தானிய கட்சியின் திட்டத்துக்கு பிரான்ஸ் கண்டனம்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த ராணுவத்தை பயன்படுத்தப்போவதாக கூறும் பிரித்தானிய கட்சியின் திட்டத்துக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பிரித்தானிய கடற்படை புலம்பெயர்வோரை தூக்கிக்கொண்டு போய் பிரான்சில் விட்டுவிடும் என்று கூறியிருந்தார் பிரித்தானிய அரசியல்வாதி ஒருவர்.
புலம்பெயர்வோரை தடுக்க ராணுவம்
யூகே ரீஃபார்ம் கட்சியின் செய்தித்தொடர்பாளரான ஸியா யூசஃப், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரித்தானிய கடற்படை, பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை, ஆங்கிலக்கால்வாயிலிருந்து தூக்கிக்கொண்டு போய் பிரான்சில் விட்டுவிடும் என்றும், பிரான்ஸ் அவர்களை திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பிரான்ஸ் கண்டனம் யூகே ரீஃபார்ம் கட்சியின் செய்தித்தொடர்பாளரான ஸியா யூசஃப், புலம்பெயர்வோரை தடுக்க ராணுவத்தை பயன்படுத்தப்போவதாக கூறியுள்ளதற்கு பிரான்ஸ் தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், புலம்பெயர்வோரை தடுக்க ராணுவத்தை பயன்படுத்துவது பிரான்ஸ் இறையாண்மையை மீறும் விடயம் என்றும், கடல் சட்டத்தையும், சர்வதேச சட்டத்தையும் மீறும் விடயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பிரான்ஸ் உள்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர், இருதரப்பும் ஒப்புகொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும், பிரான்ஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் காரணமாக, ஏற்கனவே பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |