பிரான்சில் எதிர்ப்பை மீறி ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு சட்டத்தை நிறைவேற்றினார் மேக்ரான்...
பிரான்சில் எழுந்த பெரும் எதிர்ப்பையும் மீறி, ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் சட்டத்தை நிறைவேற்றினார் மேக்ரான்.
ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் திட்டம்
பிரான்சில் பணியாற்றுவோர் ஓய்வு பெறும் வயதை 62இலிருந்து 64ஆக உயர்த்தும் திட்டம் ஒன்றை முன்வைத்தார் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
ஆனால், அதற்கு பிரான்சில் கடும் எதிர்ப்பு உருவானது. மக்கள் சாலைகளில் இறங்கிப் போராட, பல இடங்களில் வன்முறை வெடித்தது.
சட்டத்தை நிறைவேற்றினார் மேக்ரான்
ஆனால், இவ்வளவு எதிர்ப்பு உருவாகியும், சற்றும் தளராத, அசராத மேக்ரான், அதை தற்போது சட்டமாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் கெஸட்டில் அந்த திட்டம் பதிவாகியாயிற்று. அபடியானால், அது சட்டமாகிவிட்டது என்று பொருள் ஆகும்.
நேற்று, பிரான்சின் அரசியல் சாசன நீதிமன்றம் மேக்ரானின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.