சிக்கன் பொரித்த எண்ணெயை வாகனத்துக்கு எரிபொருளாக பயன்படுத்த பிரான்ஸ் திட்டம்?
எரிபொருள் பிரச்சினை உலகை எங்கோ கொண்டு சென்றுகொண்டிருக்கிறது...
கடந்த சில நூற்றாண்டுகளில் வேகமாக முன்னேறிய உலகம், இப்போது பின்னோக்கித் திரும்புகிறதோ என தோன்றுகிறது.
ஆம், எரிபொருள் பிரச்சினையால் சில நாடுகளில் மக்கள் மீண்டும் விறகு சேகரிக்கத் துவங்கியுள்ளார்கள்.
பிரான்ஸ் நாட்டில் சமையலுக்கு, குறிப்பாக உனவுப்பொருட்களைப் பொறிக்கப் பயன்படுத்திய சமையல் எண்ணெயை, வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சில் சிலர் ஏற்கனவே பயன்படுத்திய சமையல் எண்ணெயை டீசல் இயந்தியங்களில் பயன்படுத்தி வருவதாக அரசல் புரசலாக கூறப்படுவதுண்டு. ஆனால், அப்படிச் செய்வது இப்போதைக்கு சட்டப்படி குற்றமாகும்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், அப்படி பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான மசோதா ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியைக் கேட்டதும் உடனே சிக்கன் அல்லது உருளைக்கிழங்கு பொறித்த எண்ணெயை அப்படியே கொண்டு வாகனத்தில் ஊற்றிவிடாதீர்கள்!
காரணம், அந்த எண்ணெய் சுத்திகரிக்கப்படவேண்டும், அத்துடன், அது டீசலுடன் சேர்த்துத்தான் பயன்படுத்தப்பட முடியும்.
ஆக, இதிலிருந்து, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் இப்போதைக்கு டீசல் இயந்திரங்களுக்கு மட்டுமே பயன்படும் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும்தானே!
Image - euronews