3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி
போர்ச்சுகலில் இரண்டு சிறுவர்களை கைவிட்டதற்காக பிரான்ஸ் நாட்டு தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியாக தவித்த 2 குழந்தைகள்
லிஸ்பனுக்கு தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அல்காசர் டோ சால்(Alcacer do Sal) பகுதியில் 3 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுவர்கள் தனியாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
உணவு, தண்ணீர் மற்றும் மாற்று உடையுடன் கண்டுபிடிக்கப்பட்ட அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணையில், சிறுவர்களின் பெற்றோர் அவர்களிடம் விளையாட்டு என்று கூறி கண்களை கட்டி காட்டுக்குள் அழைத்து சென்று கைவிட்டு விட்டு சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சிறுவர்கள் பிரான்ஸின் கோல்மர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து தாய் மற்றும் தந்தையை கண்டுபிடிக்க ஐரோப்பா முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெற்றோர்
இறுதியில் சிறுவர்களின் பெற்றோர்களான 41 வயது பெண்ணும் 55 வயது அவரது கணவரும் வியாழக்கிழமை Fatima நகரில் உள்ள உணவகத்தில் வைத்து போர்ச்சுகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் 2 நாள் விசாரணை நடைபெற்ற நிலையில், பெற்றோர்கள் இருவரையும் விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி அந்தோனியோ பியால்ஹோ உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |