வெளிநாட்டில் 68வது மாடியில் தவறி விழுந்து பிரான்ஸ் இளைஞர் மரணம்! சாகச முயற்சியின்போது நேர்ந்த கதி
பிரான்ஸைச் சேர்ந்த சாகச பிரியர் ஒருவர் 68வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
சாகச பிரியர்
பிரான்ஸ் நாட்டு இளைஞரான ரெமி லூசிடி (30) கட்டிடங்கள், டவர் கம்பங்கள் போன்றவற்றில் ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இதன்மூலம் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானார். தன்னுடைய சாகசங்களை புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டு வந்த லூசிடி, லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டிருந்தார்.
சாகசத்தின்போது விபரீதம்
இந்த நிலையில் ஹாங்காங் குடியிருப்பின் 68வது மாடிக்கு சென்று ரெமி சாகசம் செய்ய முயன்றார். ஆனால் எதிர்ப்பாராத விதமாக டவர் வளாகத்தில் ஏறும் போது தவறி விழுந்த லூசிடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
Instagram/remnigma
பணிப்பெண் ஒருவர் அவர் விழுந்ததைக் கண்டு தகவல் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், ரெமியின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லூசிடியின் கமெராவை கைப்பற்றிய பொலிஸார், அதில் அவரது சாகச ஸ்டண்ட் வீடியோக்களை கண்டனர். ஆனால் அவரது மரணத்திற்கான உத்தியோகபூர்வ காரணத்தை வெளியிடவில்லை.
Instagram/@remnigma
Instagram/@remnigma
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |