உலகின் முதல் EV சார்ஜிங் சாலையை அறிமுகம் செய்யும் பிரான்ஸ்
பிரான்ஸ், மின்சார வாகனங்கள் சாலையில் ஓடும் போதே சார்ஜ் செய்யக்கூடிய உலகின் முதல் சாலையை (EV-charging motorway) அறிமுகப்படுத்தியுள்ளது.
Electreon, VINCI Construction, Gustave Eiffel University மற்றும் Hutchinson ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து VINCI Autoroutes நிறுவனம் இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது.
பாரிஸுக்கு அருகிலுள்ள A10 சாலையில் 1.5 கிலோமீட்டர் நீளமான சோதனைப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் கார்கள், வேன்கள், பஸ்கள் மற்றும் கனரக லொறிகள் ஓடும்போதே சார்ஜ் செய்யப்படுகின்றன, வாகனத்தை நிறுத்த தேவையில்லை, பிளக் தேவையில்லை.
இந்த தொழில்நுட்பம், சாலை அடியில் பொருத்தப்பட்ட காயில்கள் மூலம் வாகனங்களில் உள்ள ரிசீவர் யூனிட்களுக்கு மின்சாரம் அனுப்புகிறது.

சோதனைகள் மூலம் 200kW-க்கும் மேற்பட்ட சராசரி மின்சார பரிமாற்றம், 300kW-க்கு மேற்பட்ட உச்ச அளவுகள் பதிவாகியுள்ளன. இது ஒரு லொறி இயக்கத்திற்கே தேவையான சக்தியை விட இரட்டிப்பு அளவாகும்.
இந்த முறை, மின்சார லொறிகளுக்கான பாரிய பேட்டரிகளின் தேவையை குறைக்கும் வாய்ப்பு கொண்டது.
மேலும், வாகனங்கள் தங்கள் வேகம், பேட்டரி நிலை மற்றும் போக்குவரத்து நிலையைப் பொறுத்து சார்ஜ் அளவை தானாக மாற்றும் “smart energy management” தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகின்றது.
இந்த முயற்சி, நீண்ட தூர மின்சார வாகன போக்குவரத்துக்கு ஒரு நிலையான மற்றும் பசுமை தீர்வை வழங்கும் புதிய பரிணாமமாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
France EV charging motorway, Wireless charging road France, A10 highway electric vehicle charging, VINCI Electreon charging technology, On-the-go EV charging system, Smart road for electric vehicles, France sustainable transport 2025, EV highway infrastructure Europe, Dynamic charging for electric trucks, Future of electric mobility France