ட்ரம்பின் Board of Peace அழைப்பு... தடாலடியாக நிராகரித்த பிரான்ஸ் ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Board of Peace-ல் சேருவதற்கான அழைப்பிற்கு சாதகமாகப் பதிலளிக்க பிரான்ஸ் விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கேள்விக்குள்ளாக்க முடியாது
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்தே குறித்த தகவல் கசிந்துள்ளது. இந்தப் வாரியம் போரினால் பாதிக்கப்பட்ட காஸாவின் புனரமைப்புப் பணிகளைக் மேற்பார்வையிடுவதற்காகவே முதலில் உருவாக்கப்பட்டது.

ஆனால், அந்த அமைப்பு அதன் பங்கை ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பிரதேசத்திற்குள் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை என்றே தற்போது தகவல் கசிந்துள்ளது.
மேலும், அதன் நோக்கம் காஸாவின் எல்லைகளைத் தாண்டிச் செல்கிறது என்று பிரெஞ்சு ஜனாதிபதிக்கு நெருக்கமான அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் Board of Peace குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள் மற்றும் கட்டமைப்பு மீதான மரியாதை குறித்து முக்கிய கேள்விகளை எழுப்புகிறது, அவற்றை எந்தச் சூழ்நிலையிலும் கேள்விக்குள்ளாக்க முடியாது என்றே மேக்ரான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்பின் இந்த நடவடிக்கையின் பின்னணி, ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு மாற்றான ஒரு முயற்சி என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

மதிப்பாய்வு செய்து வருவதாக
பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் ஆகும். முன்னதாக திங்கட்கிழமை, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரான்சின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
மட்டுமின்றி, ட்ரம்பின் இந்த நகர்வு தொடர்பில் தங்களின் நட்பு நாடுகளுடன் மதிப்பாய்வு செய்து வருவதாக பிரான்சின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்தது.

டொனால்ட் ட்ரம்பின் Board of Peace காஸாவில் உள்ள சூழ்நிலைக்கு அப்பாற்பட்டதாக விரிவடைகிறது என்ற கவலையை பிரான்ஸ் எழுப்பியுள்ளது.
இருப்பினும், காஸாவில் போர்நிறுத்தத்திற்கும், பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கான நம்பகமான அரசியல் தீர்வுக்கும் பிரான்ஸ் முழுமையாக உறுதியுடன் இருப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதிக்கு நெருக்கமான அந்த வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |