புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக பிரான்சின் புதிய நடவடிக்கை
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக பிரான்ஸ் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
பிரான்சின் புதிய நடவடிக்கை
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக பிரான்ஸ் உயர் மட்ட சிறப்பு பொலிசார் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளது.

75 சிறப்பு பொலிசாரைக் கொண்ட அந்தக் குழு, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை, பிரான்ஸ் கடற்கரையிலேயே தடுத்து நிறுத்தும்.
அவ்வகையில், கடந்த மாதத்தில் மட்டும் இந்தக் குழு பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புறப்பட்ட புலம்பெயர்வோரில் பாதி பேரை தடுத்து நிறுத்தியுள்ளது.

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்தும் வகையில், பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றைத் தொடர்ந்து பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
விடயம் என்னவென்றால், கோடையின்போது ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயலும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
அப்போது, அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கான பிரான்ஸ் பொலிசாரின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரான்சின் இந்த நடவடிக்கை பிரித்தானியாவை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் பிரான்சின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள நிலையில், பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதும், எங்கே அழுத்தம் கொடுக்கவேண்டுமோ அங்கே அழுத்தம் கொடுக்கிறோம், அதாவது, பிரான்ஸ் கடற்கரையில் கிரிமினல் குழுக்கள் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்கு அனுப்ப முயலும் நிலையில், அங்கேயே அவர்களைத் தடுத்து நிறுத்துகிறோம் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |