பெட்ரோல் நிரப்ப பக்கத்து நாட்டுக்குச் செல்லும் பிரான்ஸ் நாட்டவர்கள்
பிரான்ஸ் நாட்டவர்கள் பொதுவாக சொக்லேட் வாங்குவதற்காகவும் சிகரெட் வாங்குவதற்காகவும் சுவிட்சர்லாந்துக்குப் பயணிப்பார்கள்.
ஆனால், இப்போது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப பிரான்சிலிருந்து சுவிட்சர்லாந்துக்குச் செல்கிறார்கள் சாரதிகள்.
பெட்ரோல் நிரப்ப பக்கத்து நாட்டுக்குச் செல்லும் பிரான்ஸ் நாட்டவர்கள்
பிரான்சைவிட சுவிட்சர்லாந்தில் வாகன எரிபொருள் விலை குறைவாக உள்ளதால், அங்கு சென்று வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் சாரதிகள் எண்ணிக்கை தெற்கு பிரான்சில் அதிகரித்துவருகிறது.

சுவிஸ் நாட்டவர்கள்தான் எரிபொருள் நிரப்புவதற்காகவும், வாரம்தோறும் ஷாப்பிங் செய்வதற்காகவும் பிரான்சுக்கு பயணிப்பதுண்டு.
பிரான்ஸ் மக்களைப் பொருத்தவரை, சொக்லேட் வாங்குவதற்காகவும் சிகரெட் வாங்குவதற்காகவும் மட்டுமே சுவிட்சர்லாந்துக்குப் பயணிப்பார்கள்.
ஆனால், ஈரான் போரால் பிரான்சில் எரிபொருட்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலைகள் சற்று குறைவாக உள்ளதால், பிரான்ஸ் நாட்டவர்கள் தற்போது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப சுவிட்சர்லாந்துக்கு செல்லத் துவங்கியுள்ளார்கள்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |