மொராக்கோவுக்கு மரண அடி... இறுதிப் போட்டிக்கு முன்னேறியது Kylian Mbappe-வின் பிரான்ஸ்
கத்தார் கால்பந்து உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியை மொத்தமாக சிதறடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது பிரான்ஸ் அணி.
தியோ ஹெர்னாண்டஸ்
இதனையடுத்து ஞாயிறன்று நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை பிரான்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது. பரபரப்பான ஆட்டத்தின் முதல் 5வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் தமது அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார்.
@getty
பதில் கோல் அடிக்க மொராக்கோ வீரர்கள் தீவிரமாக முயன்றனர். எனினும் அவர்களது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. முதல் பாதி ஆட்ட நிறைவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தின் 79 வது நிமிடத்தில் மற்றொரு பிரான்ஸ் வீரர் கோலோ முவானி தனது அணிக்காக 2வது கோலை அடித்தார். இதனால் பிரான்ஸ் வெற்றி உறுதியானது.
Shutterstock
2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி
கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் உலக கோப்பை தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பிரான்ஸ் அணியுடன் இதுவரையான ஆட்டங்களில் 6 முறை அர்ஜென்டினா வெற்றிபெற்றுள்ளது. 3 முறை தோல்வியை தழுவியுள்ளது, மூன்று முறை ஆட்டம் சமனில் நிறைவடைந்துள்ளது.
@getty
மிக சமீபத்தில் 2018 உலகக் கோப்பை தொடரில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வென்றுள்ளது அர்ஜென்டினா.
மேலும், பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா இரு அணிகளும் தலா இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.