பிரான்ஸில் போதைப்பொருள் கும்பலுக்குள் துப்பாக்கி சூடு: ஓடும் காரில் 2 பேர் கொலை
வடக்கு பிரான்ஸில் போதைப்பொருள் தொடர்பாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இருவர் சுட்டுக் கொலை
வடக்கு பிரான்ஸின் Evreux நகரில் முழுக்க முழுக்க போதைப் பொருளுடன் தொடர்புடையதாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
வேகமாக முன்னேறிய பாதிக்கப்பட்டவர்களின் காரை மற்றொரு காரில் இருந்து குற்றவாளிகள் துப்பாக்கியால் சுட்டு விட்டு சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து தப்பித்து சென்றதாக பெயர் குறிப்பிடாத பொலிஸார் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவில் இருந்து செவ்வாய்க்கிழமை வரை அரங்கேறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான கணக்கு தீர்ப்பின் போது இந்த மோதல் ஏற்பட்டு இருக்கலாம் என்றும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் குண்டுகள் கலாஷ்னிக்கோவ்(Kalashnikov) வகையுடன் ஒத்து இருப்பதாகவும் கூடுதல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறை சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
Credit: Belga
இத்தகைய போதைப் பொருள் தொடர்பான துப்பாக்கிச் சூடு தெற்கு துறைமுக நகரான மார்சே-யில் தொடர்கதை ஆகிவருகிறது, ஆனால் வடக்கு பிரான்ஸின் Evreux பகுதியில் இது அசாதாரணமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |