பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை: பாரீஸ் நீதிமன்றத்தின் முடிவு
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை: பாரீஸ் நீதிமன்றத்தின் முடிவு
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள்
2007ஆம் ஆண்டு முதல், 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கோலஸ் சார்க்கோஸி.
2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, சார்க்கோஸிக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துவந்தது.
இந்நிலையில், சார்க்கோஸி வழக்கில், அவர் மீதான சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு மட்டும் உண்மை என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
ஊழல், தேர்தல் பிரச்சாரத்துக்கு சட்டவிரோதமாக பணம் பெற்றது முதலான மற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து சார்க்கோஸியை விடுவித்துள்ளது நீதிமன்றம்.
அதுவும், சட்டவிரோதமாக பெறப்பட்ட பணத்தால் சார்க்கோஸி பயனடைந்தார் என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும் நீதிமன்றம் கூறிவிட்டது.
இந்த வழக்கில் சற்று முன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சார்க்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |