பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இவருக்கு தான் வாக்களிப்பேன்! பொதுவெளியில் அறிவித்த முன்னாள் அதிபர்
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் 2வது சுற்றில் தான் எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பேன் என்பதை முன்னாள் அதிபர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தற்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருக்கும் மக்ரோனின் பதவிக்காலம் 2022 மே 13ம் திகதியுடன் முடிவடைகிறது.
ஏப்ரல் 10ம் திகதி நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் இம்மானுவேல் மக்ரோன் 27.42 சதவிகித வாக்குகளையும், மரைன் லு பென் 24.92 சதவிகித வாக்குகளையும் பெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
முதல் சுற்றில் எந்த ஒரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால், அதாவது 50 சதவித வாக்குகளுக்கு மேல் யாரும் பெறவில்லை என்பதால், ஏப்ரல் 24ம் திகதி 2வது சுற்று தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில், முதல் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அதாவது, 2வது சுற்றில் மக்ரோன் மற்றும் தீவிர வலதுசாரி வேட்பாளரான மரைன் லு பென் மோதவுள்ளனர்.
இதில், அதிகபட்ச வாக்குகளை பெறும் வேட்பாளர் பிரான்சின் அடுத்த ஜனாதிபதிபாக மே 13ம் திகதி பொறுப்போர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆடையை களைந்து பெண்களை சித்திரவதைக்கும் ரஷ்ய துருப்புகள்! துணை பிரதமர் வேதனை
இந்நிலையில், ஏப்ரல் 24ம் திகதி நடைபெறும் 2வது சுற்றில் பிரான்சின் முன்னாள் வலதுசாரி ஜனாதிபதியான Sarkozy, மக்ரோனுக்கு வாக்களிப்பேன் என்று அறிவித்திருக்கிறார்.
அதாவது, தீவிர வலதுசாரி தலைவர் மரைன் லு பென்னுக்கு எதிரான இரண்டாவது சுற்று ஜனாதிபதி வாக்குப்பதிவில் இம்மானுவேல் மக்ரோனுக்கு வாக்களிப்பேன் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் Nicolas Sarkozy தெரிவித்துள்ளார்.