மேக்ரானின் பதவிக்காலம் முடிவடைந்தால்... பிரான்சில் நிலவும் அச்சம்
சமீப காலமாக, பல நாடுகளில் தீவிர புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிகளுக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.
அப்படி புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிகள் வருங்காலத்தில் ஆட்சி அமைக்குமானால், அதனால் புலம்பெயர்ந்தோருக்கும் சிறுபான்மையினருக்கும் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சம் பல நாடுகளில் நிலவுகிறது.

பிரான்சைப் பொருத்தவரை, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் 2027உடன் முடிவடைகிறது.
விடயம் என்னவென்றால், பிரான்சிலும் புலம்பெயர்தல் எதிர்ப்பு தீவிர வலதுசாரிக் கட்சியான National Rally என்னும் கட்சிக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது.
ஆக, மேக்ரானின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்து National Rally கட்சி ஆட்சிக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் பல அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
ஆகவே, National Rally கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கான பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில், பிரான்ஸ் முன்னாள் பிரதமரான எட்வர்ட் பிலிப் (Édouard Philippe), அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில் பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளார்.
நேற்று முறைப்படி தனது பிரச்சாரத்தைத் துவக்கிய Horizons party என்னும் கட்சியை உருவாக்கியவரான எட்வர்ட், தன் கட்சி அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கூட்டி, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான National Rally கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது எப்படி என்பது குறித்த திட்டங்களை விளக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |