ட்ரம்பின் வர்த்தகப்போர் முட்டாள்தனமானது: விமர்சித்துள்ள பிரான்ஸ் அமைச்சரின் திட்டம்
ட்ரம்பின் வர்த்தகப்போர் முட்டாள்தனமானது என விமர்சித்துள்ளார் பிரான்ஸ் நிதி அமைச்சர்.
அத்துடன், நேரில் அமெரிக்காவுக்குச் சென்று நிலைமையை சீர் செய்யவும் திட்டமிட்டுள்ளார் அவர்.
ட்ரம்பின் வர்த்தகப்போர் முட்டாள்தனமானது
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 200 சதவிகித வரிகள் விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், பிரான்ஸ் நிதி அமைச்சரான எரிக் லொம்பார்ட், ட்ரம்பின் வர்த்தகப்போர் முட்டாள்தனமானது என விமர்சித்துள்ளார்.
அத்துடன், தான் விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதாக தெரிவித்துள்ள லொம்பார்ட், இந்த வரி விதிப்பு அறிவிப்புகளால் உருவாகியுள்ள பதற்றத்தை நீக்க அமெரிக்கர்களுடன் பேசவேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இப்படி வரிகள் விதிப்பதன் மூலம், அமெரிக்கா தன்னைத்தான் காயப்படுத்திக்கொள்கிறது என்று கூறியுள்ள லொம்பார்ட், இது ஒரு முட்டாள்தனமான போர் என்று விமர்சித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |