கூகுள் நிறுவனத்துக்கு 220 மில்லியன் யூரோ அபராதம் விதித்த பிரபல நாடு! ஏன் தெரியுமா?
ஓன்லைன் விளம்பர விதிமுறைகளை மீறியதற்காக கூகுள் நிறுவனத்துக்கு பிரான்சில் 220 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஓன்லைன் விளம்பரங்களை வைப்பதற்காக அதன் மேலாதிக்க சந்தை நிலையை துஷ்பிரயோகம் செய்ததைக் கண்டறிந்த பிரான்சின் சந்தை போட்டி சீரமைப்பு குழுவான் Autorité de la concurrence கூகுள் நிறுவனத்துக்கு 220 மில்லியன் யூரோக்களை (267 மில்லியன்டொலர்) அபராதம் விதித்தது.
இது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை எடுக்க ஐரோப்பிய அதிகாரிகள் மேற்கொண்ட சமீபத்திய நடவடிக்கை ஆகும்.
ஆன்லைன் விளம்பர விற்பனையில் கூகிள் ஏகபோக உரிமையைக் கொண்டிருப்பதாக News Corp., பிரெஞ்சு நாளேடான Le Figaro மற்றும் பெல்ஜியத்தின் ஊடக குழுவான Rossel ஆகிய மூன்று ஊடகக் குழுக்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அதற்கான தீர்வின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் தனது சொந்த விளம்பர சேவையான AdX மற்றும் நிகழ்நேர ஏல தளமான Doubleclick Ad Exchange தளத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக Autorité de la concurrence கண்டறிந்துள்ளது.
Google Ad Manager brand-ன் கீழ் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டதிலிருந்து, இணைய தளங்கள் அல்லது மொபைல் பயன்பாடுகளில் போட்டி தளங்களைப் பயன்படுத்தி விளம்பரங்களை பொறுத்த முயற்சிக்கும் வாடிக்கையாளர்கள், கூகிளின் இரு சேவைகளை பயன்படுத்துவதை விட அதிகமாக பணம் செலுத்துவதாகக் கண்டறிந்தனர்.
பிரான்சின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஓன்லைன் விளம்பர சேவைகளில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்துவதாக Alphabet-ன் கூகுள் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.