மின்னல் வேகத்தில் கோல்கள் அடித்த எம்பாப்பே! பிரான்ஸ் மிரட்டல் வெற்றி
யூரோ தகுதிச்சுற்று போட்டியில் பிரான்ஸ் 4-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
யூரோ கால்பந்து
ஜேர்மனியில் அடுத்த ஆண்டு ஐரோப்பிய கால்பந்து தொடரான யூரோ கோப்பை நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.
பிரான்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொண்டது. Stade de France மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், பிரான்ஸ் வீரர் கிரீஸ்மன் 2வது நிமிடத்திலேயே கோல் அடித்து மிரட்டினார்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு பிரான்ஸ் வீரர் டயோட் 8வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
முதல் பாதியில் பிரான்ஸ் முன்னிலை
பின்னர் ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கைலியன் எம்பாப்பே மின்னல் வேகத்தில் பாய்ந்து அபாரமாக கோல் அடித்தார். அடுத்தடுத்து கோல்கள் விழுந்ததால் நெதர்லாந்து அணி தடுமாறியது.
இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 3-0 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் நெதர்லாந்து அணி கடுமையாக நெருக்கடி கொடுத்தது.
எம்பாப்பே மிரட்டல்
88வது நிமிடத்தில் எம்பாப்பே மீண்டும் மிரட்டலாக ஒரு கோல் அடித்தார். கடைசி வரை கோல் அடிக்க முடியாததால் நெதர்லாந்து அணி 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. மார்ச் 28ஆம் திகதி அயர்லாந்துக்கு எதிராக நடைபெற உள்ள போட்டியில் பிரான்ஸ் மோதுகிறது.
@AP