இந்தியா வந்துகொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம்: அவசரமாக பல்கேரியாவில் தரையிறக்கம்: பின்னணியை விளக்கும் செய்தி
கானா நாட்டிலிருந்து பாரீஸ் வழியாக இந்தியா வந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று, அவசரமாக பல்கேரியா நாட்டில் தரையிறக்கப்பட்டது.
காரணம், விமானம் புறப்பட்டதிலிருந்தே இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த பயணி ஒருவர் விமானத்தில் கலாட்டா செய்த வண்ணம் இருந்திருக்கிறார்.
அவர் விமான ஊழியர்களை தாக்கியதாகவும், விமானிகளின் அறைக்கதவை திறக்க முயன்றதாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
பெயர் வெளியிடப்படாத அந்த நபர் செய்த கலாட்டாவைப் பொறுக்க இயலாமல், விமானம் அவசரமாக பல்கேரிய நாட்டில் தலைநகரில் தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த நபர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் என்ன காரணத்திற்காக கலாட்டா செய்தார் என்ற விவரங்கள் எந்த பத்திரிகையிலும் கொடுக்கப்படவில்லை.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறலாம்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்கேரியாவிலுள்ள இந்திய தூதரகத்திற்கு தகவலளிக்கப்பட்டுள்ளதாக பல்கேரியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.