பாதுகாப்பு கூட்டணியை வலுப்படுத்தும் பிரான்ஸ்-ஜேர்மனி., திட்டங்களை அறிவித்த மெர்ஸ்-மேக்ரான்
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி இணைந்து, ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ சுயாட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய பாதுகாப்பு கூட்டணியை அறிவித்துள்ளன.
ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஜேர்மனியின் பிரூல் நகரில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவை எடுத்தனர்.
இரு தலைவர்களும், சீனாவின் அதிகப்படியான உற்பத்தி திறன் மற்றும் குறைந்த மதிப்புள்ள நாணயக் கொள்கைகள் ஐரோப்பாவின் பொருளாதாரத்திற்கு பெரும் அழுத்தம் தருவதாகக் கூறினர்.

“எங்கள் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் கூட்டுப் பாதுகாப்பை காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம்” என்று மெர்ஸ் தெரிவித்தார்.
மேக்ரான், “நாங்கள் சீனாவுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், உண்மை நிலையை தெளிவாகப் பார்க்கிறோம். சீனாவுடன் ஐரோப்பா தினமும் 1 பில்லியன் யூரோ வர்த்தக பற்றாக்குறையை சந்திக்கிறது” என்று கூறினார்.
மேலும், அமெரிக்கா தனது பாதுகாப்பு பொறுப்புகளை ஐரோப்பாவில் குறைக்கலாம் என்ற சாத்தியத்தை முன்னிட்டு, பிரான்ஸ் தனது அணு தடுப்பு திட்டத்தில் ஜேர்மனியுடன் ஒத்துழைக்க முனைந்துள்ளது.
ஆனால், அந்த திட்டத்திற்கான நிதி முழுமையாக பிரான்ஸ் அரசால் வழங்கப்படும் என மக்ரோன் உறுதியளித்தார்.
முன்னதாக தோல்வியடைந்த கூட்டு போர் விமான திட்டத்திற்குப் பதிலாக, “Future Combat Air System” எனப்படும் மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு திட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி, ஐரோப்பாவின் பாதுகாப்பு சுயாட்சியை வலுப்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |