குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் ஆறாவது நாளாக தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்கா, ஈரானின் தெற்கு பகுதிகளில் உள்ள பாலங்கள் மற்றும் விமான நிலையத்தை தாக்கியது. இதற்கு பதிலாக, ஈரான் குவைத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கி தீ விபத்தை ஏற்படுத்தியது.
குவைத் அதிகாரிகள், தாக்குதலால் பல மின் உற்பத்தி பிரிவுகள் செயலிழந்ததாகவும், தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவித்தனர். இதனால் அந்நாட்டின் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா பாலங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள ஈரான்ஷஹ்ர் பகுதியில் உள்ள விமான நிலையமும் தாக்குதலுக்குள்ளானது.
மேலும், அமெரிக்க தளங்கள் அமைந்துள்ள குவைத், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளிலும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. கத்தாரின் தலைநகர் தோஹாவில் வெடிப்பு ஏற்பட்டதில் ஒரு குழந்தை காயமடைந்தது.
Kuwait's Ministry of Electricity, Water and Renewable Energy says an Iranian drone/missile attack struck a power generation and water desalination facility, sparking a fire, causing significant damage, and forcing multiple electricity generation units offline. pic.twitter.com/qp52AoErc3
— распад и неуважение (@VictorKvert2008) July 17, 2026
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படையினர் ஒரு எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளனர். அதே சமயம், யேமனின் ஆயுதம் ஏந்திய படை மற்றொரு கப்பலை கைப்பற்றியதால், செங்கடல் வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் காரணமாக உலக சந்தையில் எண்ணெய் விலை 3 சதவீதம் உயர்ந்து, பங்குச் சந்தைகள் சரிவடைந்துள்ளன.
அமெரிக்கா-ஈரான் இடையிலான தற்காலிக சமாதான ஒப்பந்தம் முறிந்ததால், மீண்டும் முழுமையான போர் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |