பிரான்ஸ், ஜேர்மனியில் தொழில்துறை வீழ்ச்சியால் பொருளாதார பாதிப்பு தீவிரம்
ஐரோப்பாவின் மிக முக்கிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் தொழில்துறை வீழ்ச்சியால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் தொழில்துறை வீழ்ச்சி ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று S&P Global வெளியிட்ட நவம்பர் மாத purchasing managers index (PMI) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, PMI மதிப்பு 50-க்கு கீழே இருந்தால், அது பொருளாதார வீழ்ச்சியை குறிக்கிறது.
20 நாடுகள் கொண்ட EuroZone-ன் PMI, அக்டோபரின் 46ல் இருந்து நவம்பரில் 45.2-ஆகக் குறைந்தது.
அக்டோபரில் 44.5-ஆக இருந்த பிரான்சின் PMI நவம்பரில் 43.1-ஆக வீழ்ச்சி கண்டது. இது கொரோனா தொற்றின் ஆரம்பகாலத்திற்குப் பிறகு புதிய ஆர்டர்களில் மிகப்பாரிய வீழ்ச்சியை குறிக்கிறது.
அதேபோல், ஜேர்மனியில், PMI 43 என்ற அளவில் மாறாத நிலையில் இருந்தாலும், தொழில்துறை சிக்கல்களில் இருந்து மீள முடியாத சூழல் தொடர்கிறது. அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையின்மை, தொழில்துறையில் நம்பிக்கையை குறைத்துள்ளது.
அரசியல் சிக்கல்கள் மற்றும் பொருளாதார பாதிப்பு
பிரான்சில், அரசின் பட்ஜெட் திட்டங்களுக்கு எதிர்ப்பு மோசமான அரசியல் நிலையை உருவாக்கியுள்ளது. ஜேர்மனியில், ஒலஃப் ஷோல்ஸின் கூட்டணி அரசு உடைந்த நிலையில், முன்கூட்டிய தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், "யூரோஜோனின் தொழில்துறை மந்தநிலை முடிவுக்கு வருவதாக எந்த அறிகுறிகளும் இல்லை" என்று ஹாம்பர்க் கமெர்ஷியல் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் சைரஸ் டி லா ருபியா கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |