தமிழ்நாட்டு இளைஞரை கரம்பிடித்த பிரான்ஸ் பெண்! பாரம்பரிய முறைப்படி மீண்டும் திருமணம்
பிரான்ஸைச் சேர்ந்த இளம்பெண் மரியம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கரம்பிடித்தார்.
கிறித்துவ முறைப்படி பிரான்சில் திருமணம்
தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலைராஜன். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது உயர் படிப்பிற்காக பிரான்சிற்கு சென்றுள்ளார்.
அங்கு மரியம் என்ற இளம்பெண்ணை சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பழகி பின் காதலில் விழுந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மரியத்தின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் கிறித்துவ முறைப்படி, இருவரும் கடந்த மே மாதம் பிரான்சில் திருமணம் செய்துகொண்டனர்.
தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம்
இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டியில் இவர்களின் திருமணம் தமிழர் பாரம்பரிய முறைப்படி மீண்டும் நடந்தது.
கலைராஜன்-மரியம் இருவரின் குடும்பத்தினரும் ஒன்றாக மணமக்களை வாழ்த்தினர். திருமணம் குறித்து மரியம் கூறுகையில்,
"கலைராஜனும், நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இந்தியாவிற்கு வந்து தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் குடும்பத்தில் நானும் ஒருவர் என்பது மிகவும் மகிழ்ச்சி" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |