முன்மாதிரியாக இருக்கவேண்டிய ஒரு ஜனாதிபதி தன் ஆசிரியையே திருமணம் செய்யலாமா? இமானுவல் மேக்ரானை திணறடித்த ஊடகவியலாளர்!
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தன் ஆசிரியையை திருமணம் செய்துகொண்டவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
ஆசிரியை மீது ஏற்பட்ட காதல்
அப்போது இமானுவல் மேக்ரானுக்கு வெறும் 17 வயது. தற்போது அவரது மனைவியாக இருக்கும் பிரிஜிட்டுக்கோ அப்போதே 40 வயது. அவருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகளும் இருந்தார்கள்.
பிரான்ஸ் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிய பிரிஜிட், நாடக சபா ஒன்றை நடத்திவந்தார். மாணவரான மேக்ரான் அதில் ஒரு நடிகராக இருந்தார்.
தன்னைவிட 24 வயது மூத்த பிரிஜிட் மீது மேக்ரான் காதல் வசப்பட, 2007ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இப்போதும் அதற்காக மேக்ரான் பிரிஜிட் தம்பதியரை கேலி செய்வோர் உண்டு.
image - Ludovic Marin, Pool Photo via AP
ஜனாதிபதியை துணிச்சலாக நேருக்கு நேர் கேள்வி கேட்ட ஊடகவியலாளர்
ஆனாலும், நீங்கள் எப்படி உங்கள் ஆசிரியையே திருமணம் செய்துகொள்ளலாம் என நேருக்கு நேராக ஜனாதிபதியை யாரும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.
இந்நிலையில், முதன்முதலாக, ஒரு ஊடகவியலாளர், நேருக்கு நேராக, முன்மாதிரியாக இருக்கவேண்டிய ஒரு ஜனாதிபதி தன் ஆசிரியையே திருமணம் செய்யலாமா? என கேள்வி கேட்டு இமானுவல் மேக்ரானை திணறடித்துள்ளார்.
அப்படி ஒரு கேள்வியை ஜனாதிபதியைப் பார்த்து கேட்டால் ஜனாதிபதி என்ன செய்வார்? அவருக்கு கோபம் வராதா?
ஆனால், ஜனாதிபதிக்கு கோபமே வரவில்லை. அவர் அந்த ஊடகவியலாளருக்கு பதிலும் கூறியுள்ளார், அதுவும் சிரித்துக்கொண்டே!
இது எப்படி சாத்தியம்?
நடந்தது என்னவென்றால், ஆட்டிஸக் குறைபாடு கொண்ட ஊடகவியலாளர்கள் ஜனாதிபதியிடம் கேள்விகள் கேட்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இமானுவல் மேக்ரான் பங்கேற்றார்.அந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதியிடம் துணிச்சலாக அவர்கள் கேள்வி கேட்கலாம், ஜனாதிபதியும் பூசி மெழுகாமல், ஒளிவு மறைவில்லாமல் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவேண்டும்.
அந்த நிகழ்ச்சியில்தான், ஆட்டிஸக் குறைபாடு கொண்ட ஒருவர், ஜனாதிபதி இமானுவல் மேக்ரானைப் பார்த்து, ஒரு ஜனாதிபதி, முன்மாதிரியாக இருக்கவேண்டிய அவர், தன் ஆசிரியையே திருமணம் செய்யலாமா? என கேள்வி கேட்டார்.
அந்த கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த மேக்ரான், இது முன்மாதிரியைக் குறித்த விடயம் அல்ல, பாருங்கள், நீங்கள் காதலில் இருக்கும்போது நீங்கள் எதையும் முடிவு செய்யமுடியாது இல்லையா என்றார்.
அத்துடன், அவர் உண்மையில் என்னுடைய ஆசிரியை அல்ல, அவர் என்னுடைய நாடக ஆசிரியை. ஆகவே, ஆசிரியை என்பதும் நாடக ஆசிரியை என்பதும் ஒன்றல்ல, இல்லையா என்றார் மேக்ரான் சிரித்துக்கொண்டே.
அவரை பேட்டி எடுத்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களும், ஹ்ம்ம், புத்திசாலித்தனமாக பதிலளித்துவிட்டார் என்று கூறி சிரிக்க, அரங்கம் சிரிப்பலையில் மூழ்கியது!