பிரான்சில் சுரங்கப்பாதையில் மூச்சு திணறி உயிரிழந்த இளைஞர்- பொலிஸாரால் நூதன முறையில் நிகழ்த்தப்பட்ட கொலையா? தேசிய கவனத்தை ஈர்த்த சர்ச்சை சம்பவம்
பிரான்சில் சுரங்கப்பாதை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், 37 வயதான ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரெஞ்சு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பிரான்சின் தெற்கு நகரமான மார்சேலில் (Marseille) உள்ள ஒரு சுரங்கப்பாதையில், வியாழக்கிழமை அன்று 37 வயதான நபர் ஒருவரை அங்கிருந்த செக்யூரிட்டி ஏஜென்ட்கள் வலுக்கட்டாயமாக அங்கேயே வைத்து கைது செய்தனர்.
அந்த சுரங்கப்பாதையில் ஆக்சிஜன் கிடைக்காததால் மூச்சு திணறியதன் (asphyxiation death) காரணமாக, அந்த நபர் அங்கயே உயிரிழந்தார். பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரும்போது அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.
இந்த மரணம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, பிரான்சில் பொலிஸ் அதிகாரிகளின் பல வன்முறை முறைகேடுகள், அபாயகரமான கைது செய்யப்படும் நுட்பங்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
The Newyork Times (Representative)
மார்சேல் நகர சுரங்கப்பாதை நிறுவனமான RTM, இது குறித்து கூறுகையில், அந்த நபர் ரயிலில் இருந்து இறங்கியதும், நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பும் கைது செய்யப்பட்டார்.
மேலும், அந்த நபர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகவும் மற்றும் ஒரு ஏஜென்ட்டை அடித்ததாகவும் ஆர்டிஎம் தலைமை நிர்வாக அதிகாரி ஹெர்வே பக்காரியா கூறியுள்ளார்.
ஆனால், வழக்கறிஞரின் கூற்றுப்படி, "அவர் பயத்தில் சுரங்கப்பாதைக்கு உள்ளேயே தான் நிறுத்தப்படுவதை எதிர்த்து போராடியுள்ளார்" என்றார்.
அதேபோல், பாதிக்கப்பட்டவரின் தாயார், "அவருக்கு மனநல குறைபாடு இருந்ததால், அவர் அங்கு நடக்கும் விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாமலும், தன்னைப் பற்றித் தெளிவாக விளக்கமுடியாமலும் சிரமப்பட்டுள்ளார்" என்று கூறினார்.
முன்னதாக இதேபோல், பல மரணங்கள் மற்றும் வன்முறைகள் நடந்துள்ள நிலையில், இப்போது இந்த சம்பவம் அதற்கு மேலும் எண்ணெய் ஊறியுள்ளது. நாடு முழுவதும் மக்கள் காவல்துறையினரின் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
பிரெஞ்சு அரசாங்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் Chokehold Arrest Technique எனும் கழுத்தை நெரித்து கைது செய்யப்படும் நுட்பத்தை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 2020 ல் செட்ரிக் சோவியத்தில் இதேபோல் பொலிஸ் நிறுத்தத்தின் போது மூச்சுத்திணறலுக்கு ஆளான டெலிவரி டிரைவர் Chokehold முறையையில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தேசிய கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.