பிரித்தானியா உட்பட 7 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கயது பிரான்ஸ்! இனி இது தேவையில்லை.. ஆனால்: வெளியான முக்கிய அறிவிப்பு
பிரித்தானியா உட்பட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள ஏழு நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணம் தடையை நீக்குவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு பயணிக்க அத்தியாவசிய கட்டாய காரணம் இனி தேவையில்லை என்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் பயணிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் உள்ளன. பிரான்சுக்கு வரும் அனைத்து பயணிகளும் பயணிப்பதற்கு 72 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் வழங்கப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற சோதனை முடிவுகளை இன்னும் வழங்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா மாறுபாடு உட்பட கொரோனா வகைகளின் பரவலைத் தடுக்கும் ஒரு பகுதியாக அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் ஜனவரி 31 அன்று பிரான்ஸ் அரசாங்கம் தடை செய்தது நினைவுக் கூரத்தக்கது.
ஏழு நாடுகளில் சுகாதார நிலைமை மேம்படுவதால் கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுற்றுலாத்துறை அமைச்சர் ean-Baptiste Lemoyne தெரிவித்தார்.
வெள்ளியன்று வெளியிடப்படும் இந்த ஆணை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள பிற நாடுகளுக்கான அத்தியாவசிய பயணப் பட்டியல் விரிவாக்கப்பட்டு தம்பதிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கும் அனுமதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.