வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு அதிக கட்டணம்: சர்ச்சையை உருவாக்கியுள்ள பிரான்ஸ் அருங்காட்சியகம்
பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவம் காரணமாக அந்த அருங்காட்சியகம் தலைப்புச் செய்தியான நிலையில், இம்முறை அந்த அருங்காட்சியகம் தொடர்பில் சர்ச்சையை உருவாக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு அதிக கட்டணம்
சமீபத்தில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்திலிருந்து 88 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

Credit: Britanica
அந்தக் கொள்ளைச் சம்பவத்தால் உலகின் கவனம் ஈர்த்த Louvre அருங்காட்சியகம், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கான கட்டணத்தை சுமார் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஆக, ஜனவரி 14 முதல் Louvre அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத சுற்றுலாப்பயணிகள், இனி 32 யூரோக்கள் கட்டணம் செலுத்தவேண்டும்.
அருங்காட்சியகத்தில் நிலவும் சில கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இந்த கட்டண உயர்வு கொண்டுவரப்படுவதாக அருங்காட்சியக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, சமீபத்தில் அருங்காட்சியகத்தில் கொள்ளை நடந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காகவும், தொடர்ந்து அதிகரித்துவரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை எதிர்கொள்ளும் வகையில் வசதிகளை அதிகரிப்பதற்காகவும் தேவைப்படும் செலவீனங்களுக்காகவே இந்த கட்டண உயர்வு என்கிறார்கள் அவர்கள்.

விடயம் என்னவென்றால், அருங்காட்சியகத்தில் இருக்கும் 500,000க்கும் அதிகமான அரிய கலைப்பொருட்கள், ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து, அதாவது, எகிப்து போன்ற ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளிலிருந்துகொண்டுவரப்பட்டவை.
அப்படியிருக்கும்போது, இந்த அளவுக்கு அருங்காட்சியகத்துக்கு அள்ளிக்கொடுத்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது நியாயமா என கேள்வி எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |