என்னுடைய தொலைபேசி எண்ணை மாற்ற வில்லை: புடினை குறிப்பிட்டு பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி
நான் இன்னும் எனது தொலைபேசி எண்ணை மாற்ற வில்லை என ரஷ்ய ஜனாதிபதி புடினை குறிப்பிட்டு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கி கிட்டத்தட்ட தற்போது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.
இதற்கிடையில் துருக்கி, ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ஆகியோரின் முயற்சியில் நடத்தப்பட்ட 3க்கும் மேற்பட்ட போர் நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.
Anadolu Agency via Getty Images
அதே சமயம் ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட உதவியாக அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை உக்ரைனுக்கு தொடர்ந்து நிதி மற்றும் ஆயுத உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
சமீபத்தில் கூட அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூடுதல் உதவியை உக்ரைனுக்கு ஒதுக்கி தருமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை குறிப்பிட்டு நான் இன்னும் என்னுடைய தொலைபேசி எண்ணை மாற்ற வில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு புதிய முன்மொழிவுகள் எதுவும் இருந்தாலும், சர்வதேச விதிகளை மதித்து தீர்வை கொடுக்கும் அமைதிக்கான புதிய பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருந்தால் அதற்கு உதவ பிரான்ஸ் தயாராக இருப்பதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
Sputnik, Kremlin Pool Photo via AP
அத்துடன் இவ்வாறு ரஷ்யா முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதுடன் அதற்கான முடிவை கொண்டு வர தேவையான அனைத்து முயற்சிகளை செய்யும் சக்தியாக பிரான்ஸ் இருக்கும் எனவும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Emmanuel Macron, France, Ukraine, Russia, Putin, Peace Talk, Turkey, Zelenskyy, War