இதற்கு சம்மதித்தால் தண்டனை இல்லை! பிரான்ஸ் சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு
பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருந்தால், போலி சுகாதார பாஸ் வைத்திருந்து சிக்கியவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
பிரான்ஸ் தற்போது கொரோனாவின் ஐந்தாவது அலை உச்சத்தில் உள்ளது. இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு பரவி வருவதால், கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இன்று முதல்(15.12.2021) கொரோனா சுகாதார பாஸ் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
அதாவது, டிசம்பர் 15 முதல், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும், பூஸ்டர் தடுப்பூசி பெறாவிட்டால், அவர்களுடைய சுகாதார பாஸ் செயலிழந்துவிடும்.
அவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள்.
இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் போலி சுகாதார பாஸை பயன்படுத்தி வருகின்றனர்.
இப்படி பயன்படுத்துபவர்கள், அதிகாரிகளிடம் சிக்கினால், ஆயிரம் யூரோக்கள் அபராதமும், ஒன்றரை வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று(15.12.2021) செய்தியாளர்களை சந்தித்த சுகாதார செயலாளர், Olivier Veran இது குறித்து கூறுகையில், போலி சுகாதார அனுமதி பாஸ் வைத்திருந்து, தண்டனைக்கு உள்ளானவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள சம்மதித்தால், அவர்களுக்கான அபராதம் இரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.