ரஷ்யாவை போரில் வெற்றிபெற அனுமதித்தால்... எச்சரிக்கும் பிரான்ஸ் அமைச்சர்
ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறுமானால், அது சர்வதேச அளவில் குழப்பத்தை ஏற்படுத்தும் என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
பிரான்ஸ் அமைச்சரின் எச்சரிக்கை
ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யா உக்ரைனை தோற்கடிக்குமானால், அதனால் சர்வதேச அளவில் குழப்பம் ஏற்படும் என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான Jean-Noël Barrot எச்சரித்துள்ளார்.
சனிக்கிழமையன்று உக்ரைன் தலைநகரான கீவ்வுக்கு சென்றிருந்தார் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான Jean-Noël Barrot.
அன்றே, கிழக்கு உக்ரைனில் மேலும் ஒரு கிராமத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும், தொடர்ந்து சீராக முன்னேறிவருவதாகவும் ரஷ்யப் படைகள் தெரிவித்திருந்தன.
அந்த சூழலில்தான், ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறுமானால், அந்த வெற்றி, வலிமையுடையவரே வாழமுடியும் என்னும் விதியை பிரகடனம் செய்வது போலாகிவிடும்.
அதனால், சர்வதேச சட்டம் ஒழுங்கு, குழப்பத்தை நோக்கிச் சென்றுவிடும் என்று எச்சரித்துள்ளார் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான Jean-Noël Barrot.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |