விமானம் தாங்கிப் போர்க்கப்பலை செங்கடலுக்கு அனுப்பும் பிரான்ஸ்
ஹோர்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் தனது விமானம் தாங்கிப் போர்க்கப்பலை செங்கடலுக்கு அனுப்பியுள்ளது.
பிரான்ஸ் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி
பிரான்ஸ் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில். இத்தாலிய மற்றும் நெதர்லாந்து போர்க்கப்பல்களுடன், பிரான்சின் Charles de Gaulle என்னும் விமானம் தாங்கிப் போர்க்கப்பல், தெற்கு செங்கடலை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச்சூழல் சீரடைந்தபின், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்திற்கான அடித்தளத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டத்தில் பிரான்சும் பிரிட்டனும் பல வாரங்களாகப் பணியாற்றி வருகின்றன.
அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகத்தான், பிரான்ஸ் தனது விமானம் தாங்கிப் போர்க்கப்பலை செங்கடலுக்கு அனுப்பியுள்ளது.
விடயம் என்னவென்றால், அதற்கு ஈரானுடனான ஒருங்கிணைப்பும், இந்தத் திட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ள பல நாடுகளின் ஒத்துழைப்பும் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |