‘மிகவும் பதட்டமாக’ உள்ளது! பிரான்சில் புதிய முழு ஊரடங்கு அமுல்படுத்த வேண்டும்! மருத்துவமனை கூட்டமைப்பின் தலைவர் முக்கிய தகவல்
கொரோனா நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க புதிய நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட வேண்டும் என பிரான்சின் மருத்துவமனை கூட்டமைப்பின் தலைவர் Frederic Valletoux அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய ஊரடங்கு அமுல்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் அரசாங்கத்திற்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதற்கு மத்தியில் Frederic Valletoux இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தலைநகர் பாரிஸுக்கு தெற்கே உள்ள Fontainebleau-வின் மேயராக இருக்கும் Frederic Valletoux, தற்போதைய சூழலில் மருத்துவமனைகளில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது, அதேசமயம் பல பகுதிகளில் ‘மிகவும் பதட்டமாக’ உள்ளது என தெரிவித்துள்ளார்.
நேற்று பிரான்ஸ் பிரதமர் Jean Castex, நாட்டில் கொரோனா நிலைமை பலவீனமாகவே இருக்கிறது, ஆனால் தற்போது ஒரு புதிய ஊரடங்கு தேவையில்லை என்று கூறினார்.
இருப்பினும் பல முன்னணி பிரான்ஸ் மருத்துவர்கள் புதிய ஊரடங்கு அவசியம் என்று கூறியுள்ளனர்.
பிரான்சில் இன்னும் தொற்று உச்சத்தில் தான் இருக்கிறது, அதைக் குறைக்க, புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று பாரிஸில் உள்ள Saint Antoine மருத்துவமனையின் தொற்று நோய்களின் தலைவர் Karine Lacombe தெரிவித்துள்ளார்.