ஹிஜாப்களை தடை செய்யும் மசோதா: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு
விளையாட்டு நிகழ்வுகளில் ஹிஜாப்கள் அணிவதை தடை செய்யும் மசோதா மீது பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
புதன்கிழமையன்று செனட் வாக்களிக்க மறுத்ததை அடுத்து, விளையாட்டுப் போட்டிகளில் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்யும் வரைவு மசோதா பிரான்சின் தேசிய சட்டமன்றத்திற்கு அனுப்பப்படுகிறது.
இந்த மசோதாவில் பழமைவாத மேலாதிக்க மேலவையின் திருத்தமாகச் சேர்க்கப்பட்ட ஒரு ஷரத்து உள்ளது, இது விளையாட்டு கூட்டமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் "தெளிவான மத சின்னங்களை அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடுகிறது.
இருப்பினும், இந்த நடவடிக்கையானது, கீழ்சபையில் உள்ள அரசாங்கம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் எதிர்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேசிய சட்டமன்றத்தில் இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.