சீன சந்தைகளுக்கான சிறந்த அணுகல் பிரான்ஸுக்கு வேண்டும்: புருனோ லு மைரே
சீன சந்தையை அணுகுவதற்கான சிறப்பான வழிகளை பிரான்ஸ் விரும்புகிறது என்று பிரான்ஸ் நாட்டு நிதியமைச்சர் புருனோ லு மைரே தெரிவித்துள்ளார்.
சீன சந்தைகளுக்கான சிறந்த அணுகல் வேண்டும்
சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் நாட்டு நிதியமைச்சர் புருனோ லு மைரே(Bruno Le Maire) ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கில் செய்தியாளர்கள் சந்திப்பில், தங்கள் நாடு சீன சந்தைக்கான சிறந்த அணுகலைப் பெற விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் சீரான வர்த்தக உறவு உள்ளது, இருப்பினும் பிரான்ஸ் சீனாவுக்கு கூடுதல் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று சீன அதிகாரிகளை சந்தித்த பிறகு தெரிவித்தார்.
அத்துடன் பிரான்ஸ் சரியான பாதையில் செல்வதாகவும், சீன சந்தையில் பிரான்ஸ் அழகு பொருட்களுக்கான சிறப்பான அணுகலைப் பெற வழிவகுப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் சீனாவுடன் துண்டிக்கும் நாடுகளின் மாயயை பிரான்ஸ் எதிர்ப்பதாகவும் புருனோ லு மைரே தெரிவித்தார்.
சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுடன் துண்டிப்பு என்பது சாத்தியமற்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சீன நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளில் தங்களது முதலீடு மற்றும் வியாபாரங்களை மேம்படுத்துவது நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |